தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் 3 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு 2-ஆம் பருவத்துக்கான பயிற்சி முகாம் நாளை தொடக்கம் !
தமிழகத்தில் 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு இந்த ( 2026-27 ) கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.எனவே மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் 3 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு 2-ஆம் பருவத்துக்கான பயிற்சி முகாம் சென்னையில் அக்டோபர் 07 மற்றும் 08 ( புதன், வியாழன் ) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விபரம்:
நிகழ் கல்வியாண்டில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு முதல் பருவத்துக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலான 2-ஆம் பருவத்துக்கான பயிற்சி அக்.7, 8 ஆகிய இரு நாள்களுக்கு உண்டு, உறைவிட பயிற்சியாக சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் கல்வியாளர்ள், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் பயிற்சி முகாமில் முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மாவட்ட கருத்தாளர்களாகச் செயல்படவுள்ளனர். இந்தப் பயிற்சி முகாமை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மாவட்டம்தோறும் கருத்தாளர்கள் ( விரிவுரையாளர்கள் ) ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அக்டோபர் 12 மற்றும் 13 ம் தேதியும், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 15 மற்றும் 16 ம் தேதியும் நடத்த இருப்பதுகுறிப்பிடத்தக்கது.












