தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நடைபெற்றது.

தூத்துக்குடி, வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நடைபெற்றது.

கூட்டத்திற்கு வட்டார வளமைய பயிற்றுனர் பால்சாமி பார்வையாளராக கலந்து கொண்டார்.

பெற்றோர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அரசின் வழிகாட்டுதல் படி பெற்றோர் உறுப்பினர்கள் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் முன்னாள் மாணவர் பெற்றோர் உறுப்பினர் முன்னாள் மாணவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உறுப்பினர்கள் அனைவரும் தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுத்தனர்.

கல்வியாளர் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். உள்ளாட்சி பிரதிநிதி உறுப்பினர்களாக மரிய கீதா மற்றும் பேபி ஏஞ்சலின் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆசிரியர் பிரதிநிதி உறுப்பினராக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ஜாய்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியை தங்கமணி செய்திருந்தார்.

அனைத்து உறுப்பினர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதிமொழி மேற்கொண்டனர்.

தலைவர் மற்றும் துணைத் தலைவர் பள்ளிக்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி கூறினார்கள்.பள்ளியின் ஆசிரியர் ஜெரோலின் நன்றி கூறினார்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியை தலைமையில் பிற ஆசிரியர்கள் ஜாய்சி, ஜெரோலின், ஹெர்மினா, அக்சிலியா, அமுதா, பூமா, சுதா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.