கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய நாட்டுநலப் பணித்திட்ட தின விழா மற்றும் முதலாம் ஆண்டு தன்னார்வலர்கள் தொடக்க விழா நடைபெற்றது !

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய நாட்டுநலப் பணித்திட்ட தின விழா மற்றும் முதலாம் ஆண்டு தன்னார்வலர்கள் தொடக்க விழா நடைபெற்றது !

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட அணி எண்: 132 சார்பில் தேசிய நாட்டுநலப் பணித்திட்ட தின விழா மற்றும் முதலாம் ஆண்டு நாட்டுநலப் பணித்திட்ட தன்னார்வலர்கள் தொடக்க விழா – 2026 நிகழ்ச்சி 24.09.2026 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

  1. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார்.
    இந்நிகழ்ச்சியில் முனைவர்.உச்சிமாகாளி முன்னாள் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் கலந்து கொண்டு. நாட்டுநலப் பணித்திட்டத்தின் நோக்கம், சமூக சேவையின் முக்கியத்துவம், மாணவர்களின் சமூகப் பொறுப்பு, தலைமைத்துவப் பண்புகள் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு குறித்து உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக முதலாம் ஆண்டு நாட்டுநலப் பணித்திட்ட தன்னார்வலர்கள் தொடக்க விழா நடைபெற்றது. புதிதாக நாட்டுநலப் பணித்திட்டத்தில் இணைந்த முதலாம் ஆண்டு மாணவர்களை கல்லூரி முதல்வர் மற்றும் இரண்டாம் ஆண்டு நாட்டுநலப் பணித்திட்ட தன்னார்வலர் மாணவர்களும் அன்புடன் வரவேற்று, நாட்டுநலப் பணித்திட்ட அடையாளப் பதக்கத்தை அணிவித்து வாழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, நாட்டுநலப் பணித்திட்டம் சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில் சிறப்பாகப் பங்கேற்று, சமூக சேவைப் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நாட்டுநலப் பணித்திட்ட தன்னார்வலர்களுக்கு சிறப்பு முகாம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.