காலாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி இல்லை – பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு !
2026 – 2027 ம் கல்வி ஆண்டிற்கான காலாண்டு தேர்வுகள்
1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 24 வரையும்
,
3 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 24 வரையும்,
11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 25, வரையும் காலாண்டுத் தேர்வுகள் நடைபெறுகிறது.
(சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை காரணமாக தேதிகளில் மாறுதல்கள் இருக்கலாம்).
தேர்வுகள் முடிந்து 10 ம் வகுப்பு வரை செப்டம்பர் 25 வெள்ளிக்கிழமையில் இருந்தும்,11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 26 சனிக்கிழமை முதல் அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை வரையும் 1 முதல் 10 ம் வகுப்பு வரை 10 நாட்களும்,11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு 9 நாட்களும் காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து மீண்டும் அக்டோபர் 5, திங்கட்கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்படும்.
இந்த 9 மற்றும் 10 நாட்கள் விடுமுறையில் செப்டம்பர் 26,27 மற்றும் அக்டோபர் 3,4 ஆகிய நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகும்.மேலும் அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை என இந்த 5 நாட்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறை ஆகும்.இந்த விடுமுறை போக 4 மற்றும் 5 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை ஆகும்.
காலாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி இல்லை என்று பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால் அரசு பள்ளிகளைத் தவிர மற்ற தனியார் பள்ளிகளின் நிர்வாகம் அரசின் உத்தரவை கண்டு கொள்ளாமல் சிறப்பு வகுப்புகளை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதற்கான காரணம் தேர்வுக்கான பாடத்திட்டம் ( Exam portion) முடிக்கவில்லை என்று மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் வேலைக்கு வருகிறார்கள் என்று கூறினாலும், தனியார் பள்ளி நிறுவனங்கள் ஆசியர்கள் அல்லாத பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்,அலுவலகப் பணியாளர்கள் என அனைவரையும் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரவழைத்து வேலை வாங்குவது அவர்களுக்கு வழங்கும் ஊதியத்திற்காக என்பது தான் முக்கிய காரணமாகும்.












