தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப் பள்ளியில் எம்பவர் இந்தியா மற்றும் வேர்ல்ட் பேஷன்ட்ஸ் அலையன்ஸ் அமைப்புகள் இணைந்து நடத்திய “உலக நோயாளி பாதுகாப்பு தின” மாநாடு !

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப் பள்ளியில் எம்பவர் இந்தியா மற்றும் வேர்ல்ட் பேஷன்ட்ஸ் அலையன்ஸ் அமைப்புகள் இணைந்து நடத்திய “உலக நோயாளி பாதுகாப்பு தின” மாநாடு !

“எம்பவர் இந்தியா” மற்றும் “வேர்ல்ட் பேஷன்ட்ஸ் அலையன்ஸ்” ஆகிய அமைப்புகள் இணைந்து 2026 செப்டம்பர் 17 நேற்று வியாழக்கிழமை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப் பள்ளி அரங்கில் “தொற்றா நோய்களுக்கான பாதுகாப்பான சிகிச்சை” என்ற கருப்பொருளிலும் வாழ்விற்கான பாதுகாப்பான சிகிச்சை!” என்ற முழக்கத்துடனும் “உலக நோயாளி பாதுகாப்பு தின” மாநாட்டை நடத்தின.

“எம்பவர் இந்தியா” அமைப்பின் கௌரவச் செயலாளர் சங்கர் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.அப்பொழுது அவர் கூறியதாவது :

உலக சுகாதார சபையின் தீர்மானம் 72.6-ன் படி, ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் தேதி “உலக நோயாளி பாதுகாப்பு தினம்” கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் நோயாளி பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நோயாளிகள், குடும்பத்தினர், சுகாதாரப் பணியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய செயல்பாட்டு அழைப்பாக இது அமைகிறது.

2026-ஆம் ஆண்டிற்கான உலக நோயாளி பாதுகாப்பு தினமானது கோடிக்கணக்கான மக்களைப் பாதிப்பதோடு உலகளாவிய இறப்புகளில் 74 சதவீதத்திற்குக் காரணமாகவும் விளங்கும் “தொற்றா நோய்கள்” குறித்த முக்கிய சுகாதாரக் கவலையை எதிர்கொள்வதில் கவனம் செலுத்துகிறது. இதய நோய்கள் புற்றுநோய் நீரிழிவு மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள் போன்றவை நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றா நோய்களாகும் இவை அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியவை மற்றும் பெரும்பாலும் வாழ்நாள் சிகிச்சை முழுவதும் தொடர்ச்சியான தேவைப்படுபவை.

தொற்றா நோய்களை எதிர்கொள்வது ஒரு உலகளாவிய முன்னுரிமையாகும் இது தொற்றா நோய்கள் மற்றும் மனநலம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரகடனத்தில் பிரதிபலிக்கிறது மேலும் இப்பிரகடனம் தொற்றா நோய்களுக்கான தடுப்பு வலுப்படுத்தவும் நடவடிக்கைகளை நீண்ட கால மேலாண்மையை மேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கிறது
இக்குறிக்கோள்களை அடைவதற்குப் பாதுகாப்பான மற்றும் தரமான சிகிச்சைக்கான அணுகல் அவசியமாகும்.

உலகளவில் 10 நோயாளிகளில் ஒருவருக்குச் சிகிச்சையின் போது பாதிப்பு ஏற்படுகிறது இதில் ஏறக்குறைய பாதி அளவிலான பாதிப்புகளைத் தடுத்திருக்க முடியும் என்று கருதப்படுகிறது. தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நோயின் நீண்ட காலத் தன்மை, தொடர்ச்சியான சிகிச்சைத் தேவைகள் மற்றும் சுகாதார அமைப்புகளுடனான அடிக்கடி ஏற்படும் தொடர்புகள் ஆகியவற்றின் காரணமாகப் பாதிப்புக்குள்ளாகும் அதிக வாய்ப்பைக் கொண்டுள்ளனர்.

இத்தகைய தொடர்புகள் காலப்போக்கில் பாதிப்பு ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன. புற்றுநோய் போன்ற சில நோய்களில், சிகிச்சையின் போது மூன்றில் ஒரு நோயாளி வரை பாதகமான நிகழ்வுகளை எதிர்கொள்கின்றனர். பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட நாள்பட்ட நோய்களுடன் வாழ்வதால் பாதிப்புக்கான அபாயம் மேலும் அதிகரிக்கிறது. தொற்றா நோய்களுக்கான சிகிச்சையைப் பெறும் போது யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய பல துறைகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது.

கவனிக்கப்பட வேண்டிய முக்கியப் பகுதி :
இதய நோய்கள் புற்றுநோய் நீரிழிவு மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள் போன்ற தொற்றா நோய்களைத் தடுப்பது ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, நோயறிதல் சிகிச்சை மற்றும் நீண்ட கால மேலாண்மை ஆகியவற்றில் தவிர்க்கக்கூடிய பாதிப்புகளைக் குறைத்தல்.

முக்கிய நோக்கம்:
நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை அதிக ஆபத்துக்குள்ளாக்கும் கட்டமைப்புச் சவால்கள் சிதறிய சுகாதாரச் சேவைகள் மற்றும் சமூகக் காரணிகளைக் கையாள்வதுடன் முதன்மைச் சுகாதாரப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளித்தல்.

நோயாளி பங்கேற்பு:
தொற்றா நோய்களுடன் வாழும் தனிநபர்களை சிகிச்சையைப் பெறும் செயலற்ற நபர்களாகக் கருதாமல் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் செயல்படும் கூட்டாளிகளாகக் கருதி நடத்துதல்.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் எபினேசர் ஜோயல் குமார் மாநாட்டைத் தொடங்கி வைத்து “உலக நோயாளி பாதுகாப்பு தினம்” குறித்த சுவரொட்டியை வெளியிட முதல் பிரதியை எம்பவர் சங்கர் பெற்றுக்கொண்டார்.

இந்திரா நீரிழிவு மையத்தின் நாளமில்லாச் சுரப்பி நிபுணர் டாக்டர் அருள் பிரகாஷ் சிறப்புரையாற்றினார். நோயாளி பாதுகாப்பை மேம்படுத்த சுகாதார அமைப்பில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே “உலக நோயாளி பாதுகாப்பு தின” பிரச்சாரத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பத்மநாபன் மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளியின் முதல்வர் ஞானமுத்து ஜெயந்தி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மனோன்மணி நன்றியுரை ஆற்றினார்.

இம்மாநாட்டில் நோயாளிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.