நீட் தேர்வு முடிவு:14 ம் தேதி( ஜீன் ) வெளியீடு

நீட் தேர்வு முடிவு:14 ம் தேதி( ஜீன் ) வெளியீடு

நீட் – யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இந்த வாரம் வெளியிட உள்ளது.

நாடு முழுவதும் 20 லட்சம் பேர் மே 4 ம் தேதி எழுதிய நீட் தேர்வு முடிவு வருகிற 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட்- யூஜி 2025 தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ஆம் தேதி வெளியிட்டது.

மாணவர்கள் இந்த விடைக் குறிப்பின் மீது தங்களது ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5 ம் தேதி முடிவடைந்தது. மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளை பரிசீலித்த பிறகு இறுதி விடை க்குறிப்புகள் தயாரிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிகளும்,தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும்.

இந்நிலையில் நீட் – யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இந்த வாரம் வெளியிட உள்ளது.வரும் 14 ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்ய மாணவர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ” NEET UG 2025 Result ” என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால் தேர்வு முடிவை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 % இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு குழு கலந்தாய்வை நடத்தும்.

மீதமுள்ள 85% இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் கலந்தய்வை நடத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.