தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் நிறுவனர் ஏ.பி.சி.வீரபாகு நினைவு தினம் அனுசரிப்பு !
தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் நிறுவனர் குலபதி வீரபாகு நினைவு தினம் 13.08.2026, கல்லூரியின் பொன் விழா அரங்கில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் முன்னுரையை கல்லூரியின் பொருளறிவியல் துறை துணைப் பேராசிரியர் முனைவர்.குருவாசுகி வழங்கினார் .
தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் மேனாள் முதல்வர், முனைவர்.சுப்புலட்சுமி,குலபதி குறித்து, அவரது வாழ்வியல் சிந்தனைகள், அரசியல் வாழ்க்கை மற்றும் கல்விச் சேவைகள், பற்றி, தம் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.
நிறுவனருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒரு நிமிடம் மௌனம் கடைபிடிக்கப்பட்டதுடன்,முதல்வர் முனைவர்.கனகராஜ் சிறப்பு விருந்தினர், பேராசிரியர்கள், மாணவ ஆசிரியர்களால், நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்த் துறை துணைப் பேராசிரியர் முனைவர்.பாபு நிறுவனர் குறித்த கவிதை வழங்க, உயிரறிவியல் துறை துணைப் பேராசிரியர் முனைவர்.அல்லிமுத்து, நிறைவுரையை வழங்கினார்.
கல்வியியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு, மாணவ ஆசிரியர்கள், சண்முக கனேசன், ஆண்டனி சஞ்சய் மற்றும் ஜெயமாரி, கல்வியியல் துறை இணைப் பேராசிரியர், முனைவர்.பிரேமலதாவுடன், இணைந்து வழங்கிய குலபதி வீரபாகு குறித்த பாடல், ஒலி, ஒளி, தொகுப்பு திரையிடப்பட்டது.
நிறுவனர் தின நிகழ்வுகளின், தொடர்ச்சியாக, கல்லூரி வளாகத்திலுள்ள சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், தூத்துக்குடி புனித யோசேப்பு முதியோர் இல்ல பெரியோர்களுக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.
நிறுவனர் தின நிகழ்வானது, கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி, கல்லூரி முதல்வர் முனைவர்.கனகராஜ் தலைமையில், கல்வியியல் துறை, பேராசிரியர்கள், முனைவர்.பிரேமலதா, முனைவர்.சசிகலா மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்களால், ஒருங்கிணைக்கப்பட்டது.
நிகழ்வின் ஆங்கிலத் துறை துணைப் பேராசிரியர் பிரியா, மற்றும் பொருளறிவியல் துறை துணைப் பேராசிரியர்,கவிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.












