தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளைக் கண்டறியும் பணி தொடர்பாக அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்/ பொறுப்பாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் :

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளைக் கண்டறியும் பணி தொடர்பாக அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்/ பொறுப்பாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் :

தூத்துக்குடி நகர்ப்புற வட்டார வளமையத்தில் பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளைக் கண்டறியும் பணி தொடர்பாக அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்/ பொறுப்பாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று ( 08 – 08 – 2026 ) சனிக்கிழமை தூத்துக்குடி நகர்ப்புறவட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் 30 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகளை EMIS பொதுத் தளத்திற்கு அனுப்புவது குறித்தும் , பொதுத்தளத்தில் உள்ள மாணவர்களுக்கு சரியான காரணத்தை கண்டறிந்து செயலியில் பதிவு செய்யவும், அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது குறித்தும் விளக்கிக் கூறினார்.

வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு நல்ல விழுமியங்களை கற்றுத் தர வேண்டும் என அறிவுறுத்தினார்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி பள்ளியின் கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் குறித்து UDISE தளத்தில் பதிவு செய்வது பற்றி விளக்கி கூறினார்.

கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது குறித்தும், வெற்றியாளர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்தல் குறித்தும், பிரசாஸ்த் போர்ட்டல் வீடியோக்கள் குறித்தும்
வட்டார ஒருங்கிணைப்பாளர் கணபதி எடுத்துக் கூறினார்.

வட்டார மேற்பார்வையாளர் பொறுப்பு வனிதா அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து எவ்வாறு செய்வது என்பது பற்றி விளக்கினார்.