நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு :
11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி !
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர உதவும் இந்தாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு, மே 3ம் தேதி நடந்தது. இதில் வினாத்தாள் கசிவு காரணமாக, ஜூன் 21ம் தேதி மறு தேர்வு நடந்தது.
இந்தத் தேர்வு முடிவுகளை நேற்று ( ஜூலை 16) வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை. இந்தத் தேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 58 சதவீதம் பேர் மாணவிகள்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவின் பன்ஷூல் ஆகியோர் 720க்கு 716 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்கள்.
138 பேர் 690 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். அதில் 93 சதவீதம் பேர் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
19 பேர் 700 மதிப்பெண்களுக்கு மேலும்
1,492 பேர் 659க்கு மேலும்
10,160 பேர் 600க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
500க்கு மேல் 90,780 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 1.7 லட்சம் பேரும், குறைவாக லட்சத்தீவு 43 பேரும் தேர்ச்சி பெற்றனர்.












