🌹முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்

  • 🌹முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்🌹

 

தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
( பாரதி)

இன்று தமிழ் நாட்டின் 13 வது முதலமைச்சராக பதவி ஏற்கும் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தில் கல்வியை மிகச் சிறப்பான திட்டங்கள் மூலம் உயர்த்தவும், முந்தைய அரசின் கல்விக்கான நல்ல பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும், தங்களுக்கு வாக்களித்த இளைஞர்களின் எதிர்கால எண்ணங்களை நிறைவேற்றவும்,கல்வி பயிலும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் துணை நிற்க வேண்டும் என்றும் கல்விச் செய்திகள் மூலம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாக்களித்த மக்களுக்கு சந்தோசமான நல்லாட்சியை தொடர்ந்து வழங்கி, தொடர்ந்து முதல்வராக தொடர வாழ்த்துகிறேன் 🌹🙏

அன்புடன்

க.பொன் பலவேச ராஜ்,

ஆசிரியர்

“கல்விச் செய்திகள்”