தூத்துக்குடி, வ. உ. சிதம்பரம் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாவட்ட கலெக்டர் இளம்பகவத் இ.ஆ.ப. பங்கேற்பு

தூத்துக்குடி, வ. உ. சிதம்பரம் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி :
மாவட்ட கலெக்டர் இளம்பகவத் இ.ஆ.ப. பங்கேற்பு

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஒவ்வொரு வாக்காளருக்கு தரப்பட்ட வாக்குரிமை என்பது ஒரு அற்புத சக்தி. அதை அனைவரும் 100% பயன்படுத்த வேண்டும் என்பதை மையப்படுத்திய புதுமையான ஆடை அலங்கார நிகழ்வு 100% வாக்குப்பதிவு எனும் மையக்கருத்து மனித திறல் காட்சி கையெழுத்து இயக்கம், புதுமையான விதத்தில் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வாக்காளர் விழிப்புணர்வு படம் வெளியீடு ஆகியவை நடைபெற்றன.

விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் இளம் பகவத் இ.ஆ.ப சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமையுரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் வாக்காளர் உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம் இ.ஆ.ப ஏற்புரை நிகழ்த்தினார்.

வ. உ சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் முனைவர் வீரபாகு முன்னிலை வகித்தார். நிகழ்வை வ. உ. சிதம்பரம் கல்லூரி இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஜாக்சன் ஒருங்கிணைத்ததோடு நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிகழ்வில் வாக்காளர் விழிப்புணர்வு படம் வெளியிடப்பட்டது.