விழுப்புரம் மாவட்டம் வி.சாத்தனூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டம் வி.சாத்தனூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டம் வி.சாத்தனூரில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி கடந்த நூற்றாண்டில் 1926 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி தற்போது நூறு ஆண்டுகளை கடந்து மாணவர்களுக்கு கல்வியை சிறப்பாக வழங்கி வருகிறது.

இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கடந்த 20 – 3 – 2026 ( மார்ச் ) வெள்ளிக்கிழமை மதியம் 3.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் வைத்து தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

நூற்றாண்டு விழாவிற்கு வரவேற்புரை வழங்கினார் பள்ளித் தலைமை ஆசிரியர் ( பொறுப்பு ) கோவிந்தம்மாள்.

கலியவரதன்,உதவி கல்வி அலுவலர் ( ஆதிந ) விழுப்புரம். ஆதிசக்தி சிவகுமரி மன்னன்,தனி வட்டாட்சியர் ( ஆதிந )விழுப்புரம். வட்டாரக் கல்வி அலுவலர்கள் விக்கிரவாண்டி,சேகர் மற்றும் புஷ்பராணி ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர் ( வ.ஊ ) சையது முகமது, வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி.ஊ ), மணிவண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் வி.சாத்தனூர், விமலா தமிழரசன், ஒன்றியக் கவுன்சிலர் வி.சாத்தனூர்.ஏகாம்பரம், விழுப்புரம் கல்வி கேந்திரா இயக்குநர்,சின்னப்பன்,ரியல் தொண்டு நிறுவனம் இயக்குநர் லாரன்ஸ்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் பானு , ஆசிரியர் பயிற்றுநர் உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும் மேனாள் தலைமை ஆசிரியர்கள், மேனாள் உதவி ஆசிரியர்கள் மற்றும் மேனாள் மாணவர்கள் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்..

நிகழ்ச்சியில் மாணவ – மாணவிகளின் ஆடல், பாடல்,மாறுவேடப் போட்டி ,நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆசிரியர்கள் நூற்றாண்டு விழா கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள்.

விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர்களாக ஜெய கல்விக்கரசி GMR, பிரபாவதி SMC, கலா ஆகியோர் கலந்து கொண்டனர்..

நிகழ்ச்சியின் இறுதியில் இடைநிலை ஆசிரியயை சாந்தி நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள்,பள்ளி மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊராட்சி பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்,சத்துணவு மற்றும் காலை சிற்றுண்டி அமைப்பாளர்கள், கிராம முக்கியஸ்தர்கள்,ஊர் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நாட்டுப் பண்ணுடன் நூற்றாண்டு விழா நிறைவு பெற்றது.