- தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரியில் முப்பெரும்விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையில் அமைந்துள்ள கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 06.03.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மகளிர் தினம், விளையாட்டு தினம் மற்றும் கல்லூரி தினம் இணைந்த முப்பெரும் விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது. கல்லூரி முதல்வர் முனைவர். இளங்குமரன் வரவேற்புரை வழங்கினார். அவர் தம் உரையில் கீதா ஜீவன் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் மருத்துவர் மகிழ்ஜான் சந்தோஷ், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர்.பாலசுப்ரமணியன், கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் சுதன் ஹீலர்,சுதா ஹீலர் மற்றும் மருத்துவர் கீர்த்தனா மகிழ் ஆகியோரை வரவேற்றார்.
சுயநிதி பிரிவில் உள்ள கல்லூரிகளுக்கு 2(f) கிடைப்பது அரிதானது. அத்தகைய சிறப்பு நம் கல்லூரிக்கு கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்கு முதன்மை காரணமாக இருந்த கல்லூரிச் செயலர் ஜீவன் ஜேக்கப் மற்றும் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் அனைவரின் கடின முயற்சியே இந்த வெற்றிக்கு காரணமாகிறது என்று கூறினார்.
கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி எலும்பியல் துறை அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர்.மகிழ் ஜான் சந்தோஷ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அவரது உரையில் நமது கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெறுவது சிறப்புக்குரியது. மகளிர் தினம், விளையாட்டு தினம், கல்லூரி தினம் என கொண்டாடுவது பெருமைக்கு உரியதாக உள்ளது. “பெண் என்பவள், எல்லாவற்றுக்கும் உரித்தானவள், எந்த நாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அந்த நாடே முன்னேற்றத்தின் பாதையை நோக்கிச் செல்கிறது. மாணவர்கள் கல்லூரி பருவத்தில் உடல் வலிமையோடு விளையாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தங்களது தனித்திறமைகளை வளர்க்க இக்கல்லூரி அடித்தளமாக அமைகிறது என்று கூறினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர். பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரையில் பள்ளி பருவத்தில் கற்ற கல்வியை கல்லூரி பருவத்தில் பண்பாட்டினை வளர்த்து சமூகத்தை பாதுகாக்க வேண்டும். பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் முன்மாதிரி மாணவர்களாக திகழ வேண்டும். தமிழில் உள்ள 247 எழுத்துக்கள் போல மாணவர்கள் தங்கள் திறமைகளை ஒவ்வொரு நற்ச்செயலின் மூலம் வெளிபடுத்த வேண்டும். நல்ல நூல்களை கற்று, சமூகத்தில் சிறந்த தலைவர்களாக வர வேண்டும். மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். எல்லாருடைய வீட்டிலும் இறைவனின் மறுஉருவமாய் தாய்மை (அம்மா) இருக்கிறார்.பெண்கள் தாம் கற்ற கல்வியின் மூலம் குடும்பத்திலும் சமூகத்திலும் பேறு பெற்று வாழ வேண்டும் என்று கூறினார்.
விளையாடுவதன் மூலம் நோயில்லா வாழ்வு, உடல் வலிமை, மனமகிழ்ச்சி, ஆகியவை கிடைக்கின்றன. மாணவர்கள் கல்வி பயிலும் இந்த கல்லூரியில் தங்களது கலைத்திறனை பறைசாற்றும் வகையில் ஆயக்கலைகளை கற்க வேண்டும். இந்த நாள் மாணவர்கள் நினைவில் வைத்து மகிழக் கூடிய நன்னாள் ஆகும். மாணவர்கள் தங்களது பன்முக பரிணாமத்தை இக்கல்லூரிக்கு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், நாட்டுப்புற நடனம், மௌனமொழி நாடகம் நகைச்சுவை குறு நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் 02.03.2026 அன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றியாளர்களை ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் சுதா, அறிமுகப்படுத்தினார்.
நிறைவாக ஆங்கிலத்துறைத் தலைவர் மரிய ஆண்டனி மோனிகா நன்றியுரை நல்கினார். ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் கிருஷ்ணப்ரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரி நிர்வாககுழு உறுப்பினர்கள் சுதன் ஹீலர், திருமதி.சுதா சுதன், மருத்துவர்.கீர்த்தனா மகிழ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்து துறை மாணவ மாணவிகள் பேராசிரியர்களுமாக 250 பேர் கலந்து கொண்டனர். முதல்வரின் ஆலோசனையின் படி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் தனலெட்சுமி, வணிகவியல் துறைத் தலைவர் இசக்கிமுத்து, மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், உடற்கல்வி இயக்குனர் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.












