தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி மாறுவேடப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி: அமைச்சர் கீதா ஜீவன் பரிசு வழங்கினார்

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி மாறுவேடப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி:
அமைச்சர் கீதா ஜீவன் பரிசு வழங்கினார்

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி.
கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற முதலாம் வகுப்பு மாணவி நந்தனாவை பாராட்டி தமிழக சமூகநலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசும், சான்றிதழும் வழங்கினார்கள்.

மாணவி நந்தனாவை காலை இறைவனுக்கு கூட்டத்தின் போது தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

மேலும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் சபரீஷ் என்ற மாணவன் ஒரு மணி நேரம் இடைவிடாத சிலம்பம் சுற்றும் போட்டியில் பங்கு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளான். அவனையும் இன்று தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.