தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கூத்துப்பட்டறை

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கூத்துப்பட்டறை

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் தமிழ்த்துறை, முத்தமிழ் இலக்கியப்பேரவை சார்பில் “மெய்ப்பாட்டியல் நோக்கில் துன்பியல்” என்ற பொருண்மையில் கூத்துப்பட்டறை பிப்ரவரி – 03 அன்று நடைபெற்றது.

இதில் இளங்கல்வியியல் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் திரளாக பங்கேற்று துன்பியலை மையப்படுத்தி
குருபக்தி,கைம்பெண் நிலை, பெண்ணடிமை விழிப்புணர்வு,புத்த தர்மம், பாசம், நாட்டுப்புற இசை, கலைஞன் யார், இழப்பின் துயரம், மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற பல்வேறு கதைக்களங்களில் கூத்து, நடனம் நிழ்த்தினர்.

முன்னதாக பேராசிரியர் பிரேமலதா வரவேற்புரை வழங்கினார்.
நோக்கவுரை முனைவர்.பாபு தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கூற்று பட்டறையின் முக்கியத்துவத்தை மாணவ ஆசிரியர்களுக்கு விளக்கினார்.

கல்லூரி முதல்வர் கனகராஜ் தங்கவேல் தலைமை உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தோற்பாவைக் கலைஞர் முது கலைமாமமணி ராஜூ பங்கேற்று தோற்பாவை கூத்தின் அம்சங்களை பார்வையாளர்களுக்கு செய்து காண்பித்தார்.

முன்னதாக சிறப்பு விருந்தினரை பிரியா ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் அறிமுகப்படுத்தினார்.இறுதியாக உயிரறிவியல் துறை பேராசிரியர் அல்லிமுத்து நன்றியுரை கூறினார்..