அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ( DA) 2 சதவீதம் உயர்கிறது
அரசு ஊழியர்களுக்கு 01.01.2026 முதல் அகவிலைப்படி 58% லிருந்து 60% ஆக அதிகரித்தது.
அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வின் அடிப்படையில், ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.
கடந்த ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலத்தில், விலைவாசி உயர்வு குறியீட்டு எண் இன்று வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் 01.01.2026 முதல், அகவிலைப்படி 2% உயர்ந்து, 58% முதல் 60% ஆக அதிகரித்தது.
இதற்கான முறையான அறிவிப்பு, மார்ச் மாதம் இறுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு அரசு, தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது.
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
குறிப்பு :
அகவிலைப்படி என்பது Dearness Allowance (சுருக்கமாக DA) ஆகும். இது பணவீக்கத்தின் (Inflation) தாக்கத்தைக் குறைப்பதற்காக அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வுக்கான ஒரு படியாகும்.












