தூத்துக்குடியில் புத்தாண்டு தொடக்கத்தில் செயல் இழந்தது கனரா வங்கி ஏடிஎம்-கள்
ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பரிதவிப்பு
பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கனரா வங்கி 1906 ஜூலை 1-ஆம் தேதி மங்களூரில் அம்மேம்பாள் சுப்பா ராவ் பாய் என்பவரால் தொடங்கப்பட்டது; முதலில் ‘கனரா இந்து நிரந்தர நிதி லிமிடெட்’ என அழைக்கப்பட்டு, 1910-இல் கனரா வங்கி லிமிடெட் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1969-இல், இந்திய அரசின் 14 முக்கிய வங்கிகளுடன் கனரா வங்கியும் தேசியமயமாக்கப்பட்டது.
1976-இல் தனது 1000-வது கிளையைத் திறந்தது.
2006 – ல், வங்கி தனது நூறாண்டு கால சேவையை நிறைவு செய்தது.
இன்று, கனரா வங்கி இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக உள்ளது, மேலும் லண்டன், துபாய், நியூயார்க் போன்ற நாடுகளிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.
கனரா வங்கி இந்தியாவில் 15,000-க்கும் மேற்பட்ட ஏடிஎம்களைக் கொண்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றது.
உலகம் எங்கும் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் இந்த வேளையில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 அனைத்து ஆசிரியர்கள்,அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பள நாள் என்பதனால் அவர்களுக்கு வங்கியில் தங்களுடைய மாத சம்பளத்தை அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் செலுத்தும் இந்த வேளையில் தூத்துக்குடியில் 90 சதவீதம் கனரா வங்கி ஏடிஎம் களில்பணம்இல்லை.
டிசம்பர் 31என்பதையும் விட புத்தாண்டு பிறப்பதனால் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் சம்பள நாள் என்று தங்களது சம்பளத் தொகையை எடுக்க வாங்கி சென்ற கனரா வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
தூத்துக்குடியில் உள்ள பீச் ரோடு ஏடிஎம், மேலூர் ஏடிஎம் கந்தசாமி புரம் ஏடிஎம் இவைகள் வங்கி கிளையுடன் செயல்படும் ஏடிஎம் ஆகும். மேலும் டூவிபுரம், எட்டையபுரம் ரோடு, ஆகிய தனியாக உள்ள கனரா வங்கி ஏடிஎம்களும் டிசம்பர் 31 இரவு முதல் நேற்று ஜனவரி 1, 2026 அன்று இரவு வரை வேலை செய்யாமல் முடங்கியது. பணம் டெபாசிட் பண்ண கூடிய மெஷின்கள் உள்ள சிதம்பர நகர் மற்றும் மட்டக்கடை ஆகிய இடங்களில் வங்கி கிளையுடன் உள்ள இரண்டு ஏடிஎம் களில் மட்டுமே பணம் எடுக்க முடிந்தது.. எனவே சிதம்பர நகர் ஏடிஎம்மில் வாடிக்கையாளரின் கூட்டம் அலை மோதியது. இதனால் மக்கள் பெரும் அவதி கொண்டனர்.
எத்தனை பேர் சம்பளத்தொகை எடுத்து தாங்கள் வாங்கிய லோன்களை கட்ட வேண்டிய சூழ்நிலையில் இருப்பார்கள். மேலும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தங்கள் சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இதில் இவ்வளவு பெரிய கனரா வங்கி நிறுவனம் எதையும் கண்டு கொள்ளாமல் இரண்டு நாட்கள் தங்களது ஏடிஎம்மில் பணத்தை வைக்காமல் வாடிக்கையாளர்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் கனரா வங்கி நிறுவனத்தினர்.இது மாத கடைசியில் தொடர் கதையாக உள்ளது.
மேலும் கனரா வங்கியில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் பொழுது ஒரு நாளும் அதில் நாம் பணம் எடுத்த பிறகு ரசீது வெளி வருவதில்லை. ஆனால் மூன்று தடவைக்கு மேல் பணம் எடுத்தவுடன் நமது கணக்கிலிருந்து 23 ரூபாய் மட்டும் பிடித்தம் செய்து உடனே நமக்கு குறுஞ்செய்தியை அனுப்பி விடுவார்கள்.ஆனால் ஒருமுறை கூட நாம் பணம் எடுத்தவுடன் அதற்கான ரசீது வருவதில்லை.
இதில் மிகவும் மும்முரமாக இருக்கும் கனரா வங்கி நிறுவனம் மற்ற விஷயத்திலும் வாடிக்கையாளர்களுக்கு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதுதான் கனரா வங்கி வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் இவ்வாறு வாடிக்கையாளர்களின் சம்பள தேதியான மாத இறுதி நாட்களில் வாடிக்கையாக தனது ஏடிஎம் களில் பணம் இல்லாமல் கவனமாக பார்த்துக் கொள்ளும் கனரா வங்கி நிறுவனம் இதனை ஏன் செய்கிறது?
தங்களது வருமானத்திற்கா அல்லது அடுத்த வங்கியில் பணம் எடுப்பதினால் அந்த வங்கிக்கு வருமானத்தை ஈட்டி கொடுக்கிறதா?
மேலும் ஏடிஎம் ல் பணம் இல்லை என்றால் ஷட்டரை அடைத்து வைக்கலாமே?
விளக்கம் கொடுக்குமா கனரா வங்கி நிறுவனம்…












