நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில்
கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்!

நெல்லை வண்ணார்ப் பேட்டை
எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி, எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ பள்ளி இணைந்து கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஸ்காட் குழும நிறுவனர் முனைவர். கிளிட்டஸ் பாபு, துணைத் தலைவர் முனைவர். அமலி கிளிட்டஸ் பாபு ஆகியோர் வாழ்த்துக்களுடன் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக பாளையங்கோட்டை தூய சவேரியார் உயர்நிலைப் பள்ளி தாளாளர் அருட் தந்தை ஆல்பெர்ட் ஜோசப் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழா அருளுரை ஆற்றினார்.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அனைத்து துறை மாணவர்கள் கிறிஸ்துமஸ் குடில்களை சமூக விழிப்புணர்வை சித்தரித்து அழகுற அமைத்திருந்தனர். அதனை சிறப்பு விருந்தினர் பார்வையிட்டு பாராட்டினார்.

பின்னர், பேசுகையில், இந்த விழா மற்றவர்களுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சியான விழா. கிறிஸ்துமஸ் விழா என்றாலே பிறருக்கு கொடுத்து மகிழ்வதாகும். படிக்கும்போதே ஏழை மக்களுக்கு சேவை செய்தவர் பிரான்சிஸ் சேவியர் ஆவர். அதுபோல மாணவ, மாணவியர் ஏழை மக்களுக்கு உதவியுள்ளதை பாராட்டுகிறேன் என்றார்.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த பள்ளி, கல்லூரி மற்றும் அன்பு இல்ல மாற்று திறனாளி மாணவர்களின் நடன நிகழ்ச்சியும்,.எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கிறிஸ்துமஸ் குடில் போட்டியில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை முதல் பரிசும், 2ம் பரிசு ஐ.டி துறையும், 3ம் பரிசு எம்.சி.ஏ துறையும் பெற்றன. அவர்களுக்கு வெற்றி பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஏழை, எளிய, மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் ஸ்காட் கல்விக்குழும பொதுமேலாளர் ஜார்ஜ் கிளிங்டன், பொதுமேலாளர் கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் முனைவர். வேல்முருகன், இயக்குநர்கள் ஜான் கென்னடி, முகமது சாதிக், லூர்தஸ் பூபாலராயன், பள்ளி முதல்வர் முனைவர். ஹரிஹரசுதன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேப்ரியல் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்..