தூத்துக்குடி நகர்ப்புறம் வட்டார வள மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

தூத்துக்குடி நகர்ப்புறம் வட்டார வள மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா தூத்துக்குடி நகர்ப்புற வட்டார வள மையம் சார்பாக சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்வில் மாவட்ட கல்வி ( இடை நிலை) அலுவலர் முனியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் சிவபிரசாத், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, பள்ளித் தலைமையாசிரியை எமல்டா, மாவட்ட உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜ செல்வி, மேற்பார்வையாளர் (பொ) பார்வதி, நகர்ப்புற உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் கணபதி, ஆசிரியர் பயிற்றுநர் பால்சாமி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள், உறுதிமொழி ஏற்றல் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

பெற்றோர்கள், குழந்தைகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை பிஸியோதெரபிஸ்ட் ஜூடி, ஸ்பீச் தெரபிஸ்ட் சிவகாமி, சிறப்பு பயிற்றுநர்கள் ராஜா சண்முகம், ஆப்பிள் ஜெயா, டாரதி, விண்ணரசி, ரீட்டா, இருதயராணி, முத்து லட்சுமி மற்றும் பகல் நேர பாதுகாப்பு மைய பணியாளர்கள் குண சுந்தரி மற்றும் ராணி செய்திருந்தனர்.