திருவண்ணாமலைக்கு இன்று உள்ளூர் விடுமுறை
:
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இன்று கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளுர் விடுமுறைக்கு பதிலாக டிசம்பர் 13ம் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.












