கனமழை காரணம் : 3 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 03.12.2025 ) விடுமுறை அறிவிப்பு.

கனமழை காரணம் :
3 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 03.12.2025 ) விடுமுறை அறிவிப்பு.

டிட்வா புயல் சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று 03 – 12 – 2025 புதன்கிழமை
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.