கனமழை காரணமாக நாளை தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை : மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கனமழை காரணமாக நாளை தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை :
மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் குமரி கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடையும் என்று மாநில வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது.

மேலும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக நாளை தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.