ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அக்காநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 1.19 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் :
முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சியில் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அக்காநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு ஊரக உட்கமைப்பு வளர்ச்சிநிதி திட்டத்தின் கீழ் 119.59 லட்சங்கள் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நான்கு வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகம் கட்டிடத்தை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அக்காநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் *ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா* சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில்
கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் மரியஜான்,பள்ளி தலைமை ஆசிரியை ஜெயக்கொடி,பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அரவிந்த், முன்னாள் மாநகராட்சி செயற்பொறியாளர் ரங்கநாதன்,
கன்னியாகுமரி மாவட்ட வளங்கள் அலுவலர் புஷ்பா,வட்டாட்சியர் சுடலைமணி,
கிராம நிர்வாக அலுவலர் ஜவஹர் ஊராட்சி செயலாளர் ராஜன் மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…












