அன்புக்கரங்கள் திட்டம்:
தூத்துக்குடி மாணவ – மாணவிகளுக்கு பயனாளிகள் அட்டை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இ.ஆ.ப.,
சென்னை கலைவாணர் அரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளி படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்பு கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் இ. ஆ. ப.,மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் பெற்றோர் இருவரையும் இழந்த மாணவ மாணவிகளுக்கு பயனாளி அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி )செல்வி. ஐஸ்வர்யா இ. ஆ. ப. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ( பொறுப்பு ) சிதம்பரநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா ஆகியோர் கலந்து கொண்டனர்.












