அன்னையின் மறு உருவம் ஆசிரியர்

அன்னையின் மறு உருவம் ஆசிரியர்

ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை

ஆசிரியர் என்பவர் மனிதனின் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பவர். ஆசிரியர் மனிதனின் வாழ்க்கைக்கு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து வழிகளையும் நமக்கு கற்பித்துக் கொடுப்பவர். ஆசிரியர் மனிதனின் வாழ்க்கையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்.

ஒரு ஆசிரியர் தனது மாணவனை வாழ்க்கையின் எதிர்காலத்தில் எவ்வாறு பயணிப்பது என்பதை கற்றுக் கொடுப்பவர்கள். ஒரு ஆசிரியர் தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவர்களையும் ஒரே நிலையில் எவ்வித பாகுபாடும் இன்றி தனது குழந்தைகளைப் போல் நேசிப்பவர். ஒரு தாய் தனக்கு அடுத்த தனது குழந்தையை நம்பிக்கையோடு ஒருவரிடம் ஒப்படைத்துப் போவது என்றால் அது ஆசிரியர்களிடம் மட்டுமே! என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

பெற்றோர்கள் தனது குழந்தையை பள்ளியில் படிப்பதற்காக மட்டுமே அனுப்புகிறோம் என்று நினைக்கக் கூடாது, தனது குழந்தையை நாம் படிப்பதற்காக மட்டுமே அனுப்புகிறோம் என்றால் அது தவறாகும். பெற்றோர்கள் தனது குழந்தையை அடிப்படை கல்விக்காக தொடக்கப் பள்ளியில் கொண்டு சேர்க்கும் போது அந்த பள்ளியின் ஆசிரியரை நம்பி தான் தங்களது குழந்தையை பள்ளிக்கூடத்தில் விட்டு வருகிறோம். ஒரு கணத்தில் இதில் நீங்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும் பெற்றோர்களே உங்கள் குழந்தைகள், குழந்தை பருவத்தில் ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் உங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியரின் கண்காணிப்பில் தான் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

அந்த குழந்தையை ஆசிரியர் தனது குழந்தையை போல் நேசிக்கிறார்கள். அந்த குழந்தை பள்ளியில் செய்யும் சேட்டைகள், சில நேரத்தில் அழுகைகள், இரண்டு குழந்தைகள் போடும் சண்டைகள் மற்றும் அதற்குத் தேவையான கல்வியை கற்றுக் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சொல்லப்போனால் அந்த 8 மணி நேரத்தில் தனது தாயை விட அதிக கவனத்தை அந்த குழந்தைகள் மேல் செலுத்துபவர்கள் ஒரு ஆசிரியராகத் தான் இருக்க முடியும்.

நான் சில வருடங்களுக்கு முன்பு எனது கல்விச் செய்திகள் செய்தித் தாளை பள்ளிக்கூடங்களுக்கு சென்று கொடுப்பது வழக்கம். அப்போது ஒரு பள்ளியில் நான் எனது செய்தித்தாளை கொடுக்க பள்ளியின் உள்ளே நுழைந்தேன். வழக்கமாக பள்ளியின் உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் முதல் வகுப்பில் உள்ள ஆசிரியரிடம் கொடுத்து வருவேன்.

அவ்வாறு நான் செல்லும்போது ஒரு ஆசிரியர் தனது மாணவனுக்கு அவனது அரைக்கால் சட்டையின் பொத்தானை மாட்டிவிட்டு அவனது அரைக்கால் சட்டை அவனது இடுப்பை விட்டு கீழே அடிக்கடி இறங்குவதை கண்டு அவனுடைய அரைஞான் கயிறை எடுத்து அந்த டவுசர் மீது மாட்டி விட்டு கொண்டிருந்தார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது ஒரு தாய் தன் குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த செயலை அந்த தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் தனது மாணவனுக்கு செய்து கொண்டிருந்தார்.

இதே மாதிரி ஒரு நாள் ஒரு ஆசிரியர் ஒரு மாணவனுக்கு ஒரு பள்ளியின் ஆசிரியர் அவனது தலை முடியை சீவி விட்டுக் கொண்டிருந்தார். இதற்கு மேலாக ஒரு ஆசிரியர் தனது வகுப்பின் மாணவிக்கு தலையை சீவி ரிப்பன் போட்டு முடித்துக் கொண்டிருந்தார்.

நான் இதனை அடிக்கடி கண்டதினால் ஒரு நாள் பள்ளி நேரத்தில் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று கேட்கும் போது அந்த மாணவிக்கு தாய் இல்லை தந்தை இன்னொரு திருமணம் முடித்துக் கொண்டார் அவரது சித்தி தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் இந்த மாணவியை சரியாக கவனிப்பதில்லை என்று கூறினார்.

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த மாணவி படிப்பில் வகுப்பில் முதல் மாணவி அதனால் அந்த மாணவியை ஆசிரியை மிகுந்த அரவணைப்போடு தனது குழந்தை போல் பேணி தன்னால் முடிந்த உதவியை செய்து வந்துள்ளார்.

இதையெல்லாம் நாம் உற்று நோக்க வேண்டும். இதையெல்லாம் ஏன் அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது.இதை யார் செய்வார் இந்த நேரத்தில் நாம் முக்கியமாக கவனம் கொள்ள வேண்டியது என்னவென்றால் சில நேரங்களில் சில பெற்றோர்கள் ஆசிரியர்கள் எனது குழந்தையை அடித்துவிட்டார் எனது குழந்தையை திட்டி விட்டார் என்று பள்ளிக்கு சென்று அவர்களிடம் சண்டை போடுவதும் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுப்பதும் வேலையாக உள்ளது. இதையெல்லாம் நீங்கள் தவிர்க்க வேண்டும் நீங்கள் எந்த நம்பிக்கையில் ஒரு ஆசிரியரிடம் உங்களது குழந்தையை பள்ளியில் ஒப்படைத்து வருகிறீர்கள். அப்பொழுது உங்கள் குழந்தையை பார்க்க வேண்டிய கடமை யாரிடம் உள்ளது.அந்த ஆசிரியரிடம் உள்ளது. உங்கள் குழந்தைக்கு வேண்டிய கல்வியை மட்டும் அவர்கள் கொடுத்து விடலாம்.

ஆனால் அவர்கள் அதையும் மீறி உங்கள் குழந்தையை பாசமாக ஒரு தாயை போல அரவணைத்து அவர்களுக்கு நீங்கள் இல்லாத போது செய்ய வேண்டிய அனைத்து வித உதவிகளையும் செய்து வருவதை மறந்து விடக்கூடாது.

நீங்கள் இல்லாத போது அவர்களும் உங்கள் குழந்தைக்கு தாய் தானே! அதனை ஏன் நீங்கள் மறந்து விடுகிறீர்கள். ஒரு தாய்க்குள்ள உரிமை உங்கள் குழந்தையை கண்டிப்பதோ சிறிது அதிகமாக உங்கள் குழந்தை சேட்டை செய்தால் அதனை அடித்து திருத்துவதோ அவர்களுக்கு உரிமை உள்ளது தானே! இதனை நீங்கள் மறந்து விடாதீர்கள்.

ஒரு குழந்தை பள்ளியில் அடிப்படை கல்வி அதாவது தொடக்கப் பள்ளியில் பயிலும் கல்விதான் முக்கியமானது. தனது வாழ்க்கையில் ஒரு குழந்தை மாணவனோ, அல்லது மாணவியாகவோ இருக்கட்டும் ஐந்தாம் வகுப்பு வரை சிறந்ததாக பயின்றால் தான் மேல் வகுப்பிலும் ஒரு சிறந்த இடத்தைப் பெற்று மிகச் சிறந்த வேலையை எட்ட முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு மாணவன் தனது கல்வியை சிறந்ததாக கற்கவில்லை என்றால் அவனால் அதற்கு மேல் வகுப்புக்கு அதாவது உயர்நிலை மேல்நிலை வகுப்பில் சென்று கண்டிப்பாக மிகச் சரியாக படிப்பை மேற்கொள்ள முடியாது. அடிப்படை கல்வி அதாவது தொடக்கக் கல்வி ஆசிரியர்களை நீங்கள் ஒருபோதும் மறந்து விட்டார்கள். அவர்கள் உங்களுக்கு சமமானவர்கள் பெற்றோர்களே இதை கவனத்தில் கொள்ளுங்கள்.

நாம் சில நேரங்களில் பள்ளிகளுக்கு செல்லும் முன்பு அதாவது பள்ளி ஆரம்பிக்கும் முன்பும் பள்ளி விடும் நேரங்களிலும் சில விஷயங்களை நாம் உற்று நோக்க வேண்டும்.

பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பு ஆசிரியர் பள்ளிக்குள் நுழைந்த உடன் அந்த ஆசிரியரின் வகுப்பு மாணவன் அல்லது மாணவிகள் வேகமாக ஓடி வந்து அந்த ஆசிரியரின் கைப்பையை வாங்கிக்கொண்டு டீச்சர் என்னிடம் தாருங்கள் என்னிடந்தாருங்கள் என்று முந்திடி வந்து ஆசிரியரிடம் அவர்களது கைப்பையை வாங்கிக்கொண்டு வேகமாக சென்று அவரது மேஜையின் மீது வைப்பதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். அதே மாதிரி பள்ளி முடிந்தவுடன் அந்த ஆசிரியரின் கைப்பையை வாங்கிக்கொண்டு அவர்களை வாசல் வந்து வரை வந்து அவர்களிடமா கைப்பையினை கொடுத்து வழிஅனுப்பி வைப்பதில் அவர்களுக்கு ஒரு மிக்க மகிழ்ச்சி. இதில் ஆசிரியர்களும் சந்தோஷமாக தனது பிள்ளைகள் போல் ஓடிவந்து கேட்கும் போது அதனுடைய கையில் அதனை கொடுத்து அந்த குழந்தை ஓடிப் போவதையும் ஓடி வருவதையும் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்கள். சில நேரங்களில் சில மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தான் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவினை வழங்கி அவர்களை சந்தோஷப்படுத்துவதும் உண்டு.

அதே மாதிரி சில பாடங்களை கொடுத்து அதை வேகமாக செய்யும் மாணவிகளுக்கு தனது பைகளில் இருந்து ஒரு சாக்லேட் எடுத்துக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துவதும் உண்டு.

மேலும் சில ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு தேவையான புத்தகப் பை அந்த பிள்ளைகளுக்கு தேவையான ஆடைகள், காலணிகள் முதலியவற்றையும் வாங்கி கொடுக்கிறார்கள். இதற்கெல்லாம் எல்லாம் நாம் என்ன சொல்வது. இந்த செயல் ஆசிரியர்களை நாம் மெச்சும் படி உள்ளது.

இந்த ஆசிரியர் தினத்தில் இந்த பள்ளியில் நம் குழந்தைகளுக்கு நல்ல பாடங்களை வழங்கி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களுக்கு நாம் வாழ்த்துக்களையும் அவர்கள் நீண்ட ஆயுளை பெற்று பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக் கொள்வோம்.

ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும் குழந்தைகளின் படிப்பில் அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களே மிக முக்கிய பங்கு வைக்கின்றனர். தொடக்க கல்வியை வழங்குவது தான் மிகவும் கஷ்டமான ஒரு சூழலாகும்.

ஒரு குழந்தைக்கு அடிப்படை கல்வியை ஆ முதல் ஆரம்பித்து அவர்களுக்கு தேவையான அடிப்படைக் கல்வியை கற்றுக் கொடுப்பதில் எவ்வளவு சங்கடங்கள் இருப்பது என்பது அனைவருக்கும் தெரியாது. ஆனால் அதில் அவர்கள் கையைப் பிடித்து எழுதிக் கொடுத்து அவர்கள் மனதில் அதனை பதிய வைத்து அவர்களை கற்க வைப்பது எவ்வளவு கடினம் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

சிலபேர் சொல்வார்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகம் என்று, சொல்லப்போனால் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தான் அதிக ஊதியங்களை வழங்க வேண்டும். ஏனென்றால் தொடக்க கல்வியை கற்றுக் கொடுப்பதுதான் மிகவும் சிரமமான ஒன்று. அந்த சிறு வயதில் அவர்களை திறன் படுத்தி கல்வியை சொல்லப்போனால் உயர்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்புகளை விட தொடக்கக் கல்வியான அடிப்படைக் கல்வியை கற்றுக்ஸகொடுப்பதுதான் மிகவும் சிரமம்.

பாடங்களை கற்றுக் கொடுப்பதில்தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் வேலை தான் அதிகம். அவர்கள் தான் அதிக வகுப்புகள் எடுக்கிறார்கள்.

அவர்கள் பாடத்தை மட்டும் நமக்கு கற்றுக் கொடுக்கவில்லை நமக்கு தேவையான ஒழுக்கங்கள், வாழ்க்கையில் ஒரு சிறந்த இடத்தை அடைய வேண்டும் என்ற நன்னடத்தைகளையும், பெற்றோர்களை மற்றவர்களையும் மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும், அடுத்தவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் நமக்கு கற்றுக் கொடுத்து வழிநடத்தும் ஒரு வழிகாட்டலாக இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

எனவே இந்த
ஆசிரியர் தினத்தில் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அன்னைக்கு அடுத்து ஒரு ஆசிரியை ஒரு மாணவனுக்கு தாயாகவும் ஒரு ஆசிரியர் தந்தையாகும் இருந்து செயல்படும் வேளையில் ஆசிரியர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏 வாழ்த்துக்கள்🌹

நன்றி 🙏

ஆசிரியர்
“கல்விச் செய்திகள்”