பிளஸ் டூ முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!!! ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் அரசு வேலை!!!!!

தூத்துக்குடி கின்ஸ் அகாடமி

பொதுவாக ப்ளஸ் டூ வகுப்பில் சயின்ஸ் குரூப் எடுத்த மாணவர்கள் நீட் தேர்வுக்கான கோச்சிங் செல்கிறார்கள். மற்ற மாணவர்கள் சிலர் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான கோச்சிங் செல்கிறார்கள். மற்றபடி பெருவாரியான மாணவர்கள் அந்தந்த ஊரில் உள்ள ஆர்ட்ஸ் கல்லூரிகளிலும் உள்ளூர் இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் தங்கள் வசதிக்கு ஏற்ப சேர்ந்து கொள்கிறார்கள்.
இந்த மாணவர்கள் தங்கள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஏதாவது தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள். ஓரிரு வருடங்கள் அங்கு வேலை பார்த்துவிட்டு பிறகு வேலையின் கஷ்டத்தை உணர்ந்தபின் எப்பாடுபட்டாவது அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று முடிவு செய்து டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி, எஸ் எஸ் சி, வங்கி தேர்வுகள் போன்ற ஏதாவது ஒன்று படிக்கத் தொடங்குகிறார்கள்.

அவ்வாறு படிக்க துவங்கும் போது அவர்களுடைய குடும்ப சூழ்நிலை அவர்களை படிக்க அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு வயது 25ஐ கடந்து விடும். பெண்கள் என்றால் திருமணம் செய்து வைக்க முடிவு செய்வார்கள். பையன்கள் என்றால் முழு நேரமாக படிக்க வீட்டில் அனுமதிப்பதில்லை. வறுமையின் காரணமாக ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை அந்த மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் முழு நேரமாக அவர்களால் போட்டி தேர்வுக்கு படிக்க இயலாது.

ஆகவே அரசு வேலைக்கு செல்லும் மாணவர்கள் படிக்க துவங்குவதற்கான சரியான காலம் ப்ளஸ் டூ தேர்வு எழுதி முடித்த உடனே போட்டி தேர்வுக்கு படிக்க துவங்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதை விட கலைக் கல்லூரியில் சேர்வது சிறந்தது. ஏனென்றால் கல்வி கட்டணமும் குறைவாக இருக்கும். போட்டி தேர்வுக்கான பாடங்கள் படிப்பதற்கான நேரமும் அதிகம் கிடைக்கும்.

ஆகவே மாணவர்கள் உள்ளூர் கலை கல்லூரியில் பி ஏ பொருளாதாரம், பி ஏ தமிழ் , பிஏ ஆங்கிலம் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்ந்து கொள்ள வேண்டும். வேறு எந்த குரூப் எடுத்தாலும் அதிலிருந்து உங்களுக்கு எந்த கேள்விகளும் போட்டி தேர்வுக்கு வராது.

அரசு போட்டித் தேர்வுக்கு படிக்க விரும்பும் மாணவர்கள் ப்ளஸ் டூ முடித்த உடனேயே ஏதாவது ஒரு அகடமியில் சேர்ந்துகொள்வது நல்லது. கல்லூரி பாடங்களை கல்லூரிலேயே முடித்து விட வேண்டும். அகாடமியில் நடத்தும் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். இவ்வாறு தினமும் படித்து வந்தால் கல்லூரி படிப்பு முடியும் மூன்றாண்டு காலத்திற்குள் கண்டிப்பாக ஏதாவது ஒரு அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்று விடலாம்.

அரசு போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று கட்டாயம் கிடையாது . கல்லூரிக்கு செல்லாமலேயே தொலைதூரக் கல்வியில் விண்ணப்பித்து படித்து பட்டம் பெறலாம். ‌ இதனால் மாணவர்களுக்கு நேரம் அதிக அளவு மிச்சமாகும். கட்டணமும் மிக குறைவாக இருக்கும். தொலைதூர கல்வி பட்டத்தைக் கொண்டு அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு தேர்வுகள் அனைத்தும் எழுத முடியும்.

நமது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்  ஐஏஎஸ் முடித்து இருக்கிறார். அதற்கு முன்பு முதலில் குரூப் 4, குரூப் 2, குரூப் 1 என்று எழுதி வரிசையாக தேர்ச்சி பெற்றார். அவர் பிளஸ் டூ வரை மட்டுமே பள்ளியில் சென்று படித்துள்ளார் . எந்த கல்லூரிக்கும் சென்று அவர் படித்ததில்லை. அவரது பாணியை ஏழை எளிய மாணவ மாணவியர் அனைவரும் பின்பற்றலாம்.‌  இதனால் சீக்கிரமே அரசு பணி பெற முடியும்.

நமது கின்ஸ் அகாடமியில் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்காக சிறப்பு கோச்சிங் நடைபெறுகிறது. குரூப் 4, டி என் யு எஸ் ஆர் பி, எஸ் எஸ் சி, வங்கி வகுப்புகள் போன்ற பல வகுப்புகள் நடக்கிறது.

ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் கடந்த 9 ஆண்டு காலமாக மிகச் சிறப்பாக சேவை செய்து வருகிறோம். இதுவரையிலும் சுமார் ஆயிரம் மாணவர்கள் நமது அகடமியில் பயின்று பல்வேறு அரசு பணியிடம் பெற்றுள்ளார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நமது கின்ஸ் அகாடமி மாணவர் அணிஷ் டிஎன்யுஎஸ்ஆர்பி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். இந்த ஆண்டு நடந்த வங்கி தேர்வில் நமது அகாடமி மாணவர் வல்லரசு அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

ஆகவே ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் நமது கின்ஸ் அகாடமி தரும் மிகவும் தரமான கல்வியை அனைத்து மாணவ மாணவியரும் இலவசமாக பயின்று அரசு வேலை பெற வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம்….