தூத்துக்குடியில் 6 வது புத்தகத் திருவிழாவில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் 6 வது புத்தகத் திருவிழாவில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சி, தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 6வது புத்தகத் திருவிழா தூத்துக்குடி மாவட்டத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் புகைப்படக்கண்காட்சி போட்டியின் சிறந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கினை நேற்று (23.08.2025) தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், இ.ஆ.ப., மேயர் ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், இ.வ.ப.,, உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், இ.ஆ.ப.,உட்பட பலர் கலந்து கொண்டனர்.