பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 7 கோரிக்கைகளை வலியுறித்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் சார்பில் வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் சார்பில் தூத்துக்குடியில் வட்டக்கிளை மாநாடு ரங்கநாதபுரம் சி எம். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாநாட்டின் தொடக்கமாக தேசியக்கொடியும், தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் கொடியையும் ஏற்றி வைத்து மரியாதை செய்தனர். தொடர்ந்து மாநாட்டிற்கு ஞானசேகர் வட்டக்கிளை தலைவர் தலைமை தாங்கினார். சுப்பிரமணியன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர், மற்றும் ராபர்ட் கிங் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர், மற்றும் கண்ணன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பன்னீர்செல்வம் மனோகர் சிங் தூத்துக்குடி வட்ட கிளை இணைச் செயலாளர் வரவேற்புரை ஆற்றினார், மற்றும் வாழ்த்துரை முத்தையா தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மற்றும் கண்ணையா மாவட்ட பொருளாளர் மற்றும் சங்கரலிங்கம் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்புரை ஆற்றினார் மாநில இணைச்செயலாளர் லீலாவதி.

மாநாட்டில் தமிழ்நாடு அரசுக்கு மாநாட்டு கோரிக்கைகளாக மாநில அரசின் தேர்தல் வாக்குறுதியான 70 வயது நிறைந்த ஓய்வூதியர், குடும்ப ஓய்வுதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கவும் மற்றும் புதிய மருந்து காப்பீட்டு திட்டத்தில். Cashless Treatment ஐ அமல்படுத்து மருத்துவ செலவு தொகை முழுமையும் ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வு உயிர்களுக்கு வழங்கி விடு மற்றும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் CPS திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை உடனே அமல்படுத்து உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை வைத்தனர்.
நிறைவாக தூத்துக்குடி வட்டக் கிளை துணைத் தலைவர் இந்துமதி நன்றியுரை ஆற்றினார்.













