தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் சந்தை அனுபவம் பெறுவதற்கான “சந்தை – 25 ” நிகழ்ச்சி
21 ஆகஸ்ட் 2025 அன்று தூய மரியன்னை கல்லூரியில் வணிக மேலாண்மை துறை சார்பாக மாணவர்களுக்கான தொழில்முனைவோர் திறன் வளர்ச்சி மற்றும் சந்தை அனுபவம் பெறுவதற்காக “சந்தை-’25” (Sandhai’25) எனும் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்ச்சியில் மாணவர்கள் பல்வேறு தொழில் யோசனைகள், விற்பனை முறைகள், விளம்பர உத்திகள் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களது கடைகள் மற்றும் பொருட்களை விற்பனைக்கு வைத்தனர். இதில் உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகை கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி. முனைவர்.ஜெசி மற்றும் அருட்சகோதரி. முனைவர். ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ் இந் நிகழ்வினைத் தொடங்கி வைத்தனர்.

மாணவர்கள் தங்களின் பேச்சுத் திறன், விற்பனை திறன், வாடிக்கையாளர் சேவை திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தினர். இது அவர்களுக்கு நிறுவன மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் அனுபவம் பெறும் வாய்ப்பாக அமைந்தது.
பிற துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று உற்சாகமாக ஆதரவு அளித்தனர்.
முனைவர். காயத்திரி, வணிக மோலாண்மை ஒருங்கினைப்பாளர் இந்நிகழ்ச்சியினை எற்பாடு செய்திருந்தார்.
நிறைவாக, “சந்தை” நிகழ்ச்சி மாணவர்களுக்கு நடைமுறை கற்றல் வாய்ப்பு மற்றும் தொழில் நோக்கத்தில் முன்னேறும் ஊக்கமாக அமைந்தது.












