அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். படிப்பிற்க்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். படிப்பிற்க்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.

தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரியில் 300 இடங்கள் உள்ளன.

தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


தமிழ்நாட்டில் எம்.எட் பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு 2025 – 26 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை கான விண்ணப்பங்கள் இன்று ( 11-08-2025 -நேற்று ) முதல் இணையவழியில் தொடங்கும். மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்ப பதிவினை மேற்கொள்ளலாம். வருகிற 20 ம் தேதி வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பின்னர் இதற்கான தரவரிசைப் பட்டியல் இம்மாதம் 25ஆம் தேதி அன்று வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கை 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும்.

மேலும் முதலாம் ஆண்டு வகுப்புகள் அடுத்த மாதம் ( செப்டம்பர் ) 1ஆம் தேதி முதல் தொடங்கும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது