கோவில்பட்டி கம்பன் விழா போட்டியில்
உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி
கோவில்பட்டி கம்பன் கழகம் நடத்திய நான்காம் ஆண்டு கம்பன் விழா மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன.
இதில் கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றனர்.
இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையுடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த போட்டிகளில் மொத்த மதிப்பீட்டின் அடிப்படையில், உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி “ஒட்டு மொத்த சேம்பியன்” பட்டத்தை பெற்றது.
இந்த விருதினைப் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பாரதி , B.Com (PA) மாணவிகள் கரிஷ்மா மற்றும் மாரியம்மாள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விருதினை கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் விஜயன், முதல்வர் அண்ணாமலைசாமி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்கள்.












