தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் “Exponentia – 2025″என்ற தலலப்பில் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள் : வ. உ. சிதம்பரம் கல்லூரிக்கு சாம்பியன் பட்டம்

தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் “Exponentia – 2025″என்ற தலலப்பில் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள் :
வ. உ. சிதம்பரம் கல்லூரிக்கு சாம்பியன் பட்டம்

தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் கணிதத் துறையின் சார்பாக ஜூலை 17, 2025 அன்று “Exponentia-2025” என்ற தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

கல்லூரியின் செயலாளர் மற்றும் துறைத் தலைவர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ் வழிகாட்டுதலில் நடைபெற்ற இவ்விழாவில் துணை முதல்வர் முனைவ‌ர் அருட்சகோதரி எழிலரசி தொடக்க உரை வழங்கினார். முன்னாள் மாணவி செல்வி.அட்லின், காருண்யா பல்கலைக்கழகம், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸ்சி பெர்னாண்டோ நிறைவு உரை வழங்கினார். அருட்சகோதரி தெரேசா மேரி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.

காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வினாடி வினா வார்த்தைகள் இணைப்பு, மௌன விளையாட்டு, ஆய்வு கட்டுரை, மாதிரி வடிவமைப்பு மற்றும் குழு நடனம் போன்ற பல்வேறுப் போட்டிகள் நடைபெற்றன.இதில் தூத்துக்குடி , திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சுமார் பதிமூன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.