தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மகிழ்முற்றம் தொடக்க விழா
ஜின் பாக்டரி ரோடு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று (14.07.2025) “மகிழ்முற்றம்” தொடக்க விழாவானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.
பள்ளித் தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக *தொடக்கக் கல்வி அலுவலர் அன்றோ ரூபன் மற்றும் *வட்டாரக்கல்வி அலுவலர் சரஸ்வதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு மகிழ்முற்றம் குழு அமைத்தல் மற்றும் அதன் நோக்கங்கள் குறித்தும் அதன் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்.
விழாவின் சிறப்பு நிகழ்வாக பள்ளி மாணவத் தலைவர்கள், வகுப்பு தலைவர்கள், மன்றத் தலைவர்கள் போன்ற பதவிகளுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பேட்ஜ் அணிவிக்கப்பட்டது.


















