கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளியில் வாட்டர் பெல் திட்டம் அறிமுகம் மற்றும் மருத்துவர் தினவிழா

மாணவர்கள் தங்கள் உடல் நலனை பேணும்விதமாக தமிழக அரசால் பள்ளிக்கல்வித் துறை மூலம் வாட்டர்பெல் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளியில் இத்திட்டம் அறிமுகவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தனியார் பள்ளிகள்  மாவட்டக்கல்வி அலுவலர் சிதம்பரநாதன், பள்ளித்தாளாளர்  அய்யனார் மற்றும் பள்ளி முதல்வர்
மகாலட்சுமி ஆகியோர் தண்ணீர் குடித்து இத்திட்டத்தை  தொடங்கி வைத்தனர்.

மேலும் மாணவர்கள் படிக்கும் போது ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வேண்டும்
என்பதற்க்காகவும் மருத்துவர்களின் பணியை போற்றும் விதமாகவும்  மருத்துவர் தினவிழாவும் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில்  LKG முதல் 2ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் மருத்துவர் வேடம் அணிந்து பள்ளிக்கு வருகை தந்தனர்.

விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மகாலட்சுமி வழிகாட்டுதலின்படி ஆசிரியர்கள் சிறப்பாக
செய்திருந்தனர்.