எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஜூன் 29ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகளில் 5200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன.

இதைத்தவிர சுயநிதி கல்லூரிகளில் 3450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் என மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரியில் 9200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பிடிஎஸ் இடங்களை பொருத்தவரை அரசு மருத்துவ கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரியில் 1900 இடங்களும் உள்ளன. இதில் 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டில் வழங்கப்படுகிறது.அதன்படி இந்தாண்டில்ஸ 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 6ஆம் தேதி தொடங்கி www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று ஜீன் 25 உடன் நிறைவடைந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 29ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவ கல்லூரி கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இறுதியில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழாண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளதால் இந்த முறை விண்ணப்ப பதிவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.