தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் விலங்கியல் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி :
வ. உ. சிதம்பரம் கல்லூரி இளநிலை விலங்கியல் முதலாமாண்டு ( B.Sc விலங்கியல் துறை ) மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியை முதுநிலை மற்றும் விலங்கியல் ஆராய்ச்சித்துறை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி மாணவர்கள் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் நோக்கத்தில் வழிகாட்டுவதற்காக நடத்தப்பட்டது.
விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் ராதிகா வரவேற்புரையுடன் தொடங்கியது. அவர் துறையின் நோக்கம், vision, மற்றும் முக்கிய அம்சங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
மேலும், மாணவர்கள் கல்வி மற்றும் விலங்கியல் துறையில் வலிமையான அடித்தளத்தை உருவாக்குமாறு அறிவுரை வழங்கினார்.
பின்னர், துறை ஆசிரியர்கள் விலங்கியல் துறையில் உள்ள பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினர். விலங்கியல் துறையில் புதுமையான ஆராய்ச்சிகளில் ஈடுபடுமாறு மாணவர்களை ஊக்குவித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் மையம் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையத் முகமது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அரசுத் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள், திறன் மேம்பாடு மற்றும் மாணவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு ஆதாரங்கள் குறித்து அவர் சிந்தனையைத் தூண்டும் படி உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும், புதிய மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு சிறந்த தொடக்கமாகவும் இருந்தது.













