கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பெருமளவில் பங்கேற்று யோகா செய்தனர்.
மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் வகையில், பல்வேறு யோகாசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி கலந்து கொண்டு, யோகாவின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு உரையாற்றினார்.
அப்போது யோகா என்பது ஒரு உடல் பயிற்சி மட்டும் அல்ல, அது மன அமைதி மற்றும் ஒழுங்கான வாழ்வை உருவாக்கும் வழிமுறை” என்றார்.

நிகழ்ச்சி கல்லூரித் தாளாளர் விஜயன் ஆலோசனை மற்றும் ஊக்கமளிப்பின் பேரில் பேராசிரியர்கள் மாணவர்களோடு இணைந்து செயல்பட்டு, நிகழ்ச்சியின் வெற்றிக்கு மூலதனம் வகித்தனர்.

இன்றைய யோகா நிகழ்ச்சி மாணவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் ஒழுங்கான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்தது.