மார்சல் நேசமணி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் குழந்தைகளுக்கு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

மார்சல் நேசமணி பிறந்த நாளை முன்னிட்டு

தூத்துக்குடியில் குழந்தைகளுக்கு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தோடு குமரி மாவட்டத்தை இணைக்க போராடி வெற்றி கண்ட மார்ஷல் நேசமணி பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது .

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி.வி. டி. நினைவு ஆரம்பப் பள்ளியில் உள்ள மாணவ, மாணவியருக்கு மார்ஷல் நேசமணி பிறந்தநாளை முன்னிட்டு இன்று செல்போனினால் ஏற்படும் தீமைகளை பற்றி எடுத்துக் கூறி புத்தகங்களை வாசிக்க சொல்லும் பொம்மலாட்ட நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெய வேணி தலைமை தாங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி கலையின் குரல் நிறுவனர் சக்திவேல் மற்றும் குமிழ் முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் இணைந்து இந்த பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்றம் சார்பில், தலைவர் லாரன்ஸ், செயலாளர் வழக்கறிஞர் சிலுவை, பொருளாளர் ஆஸ்வால்ட் மற்றும் அமைப்பாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.