தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல் கல்லூரியில் 70 ம் ஆண்டு விளையாட்டு விழா
வ. உ. சி. கல்வியியல் கல்லூரியின் 70வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக வ. உ. சிதம்பரம் கல்வி கழகத்தின் தலைவர் திரு.மற்றும் திருமதி. கந்தசாமி கலந்து கொண்டார்கள்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர். கனகராஜ் வரவேற்புரையாற்றி, சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசும் வழங்கி கெளரவித்தார்.
தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளும், மாணவ, மாணவியர்களின் உடற்பயிற்சி கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரிய மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் வ. உ. சி. கல்வியியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர். பிளஸ்ஸி செல்வ அரசன் நன்றியுரை வழங்கினார்.
இவ்விளையாட்டு விழாவில் வ. உ. சிதம்பரம் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர். சிவஞானம் மற்றும் ஏ. பி. சி. வீரபாகு மெட்ரிக் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செல்லின் மற்றும் வ. உ. சி. கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ- ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.













