அரசுப் பள்ளியின் சேர்க்கையை அதிகரிக்க புதிய மாணவர்களுக்கு டெபாசிட் : வியப்பில் ஆழ்த்திய முன்னாள் மாணவர்கள்
நீலகிரி மாவட்டம் கீழூர் கோக்கலாடா அரசு உயர்நிலைப் பள்ளி
1922ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளி நூற்றாண்டை கடந்து இயங்கி வருகிறது. இந்த பாரம்பரிய பள்ளியைக் காக்கும் விதமாக நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவில் முன்னாள் மாணவர்களின் முழு முயற்சியால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக அரசு பள்ளியின் சேர்க்கையை அதிகரிக்க முன்னாள் மாணவர்களின் பெயரில் டெபாசிட் அளிக்கப்பட்டுள்ளன.
1ஆம் வகுப்பிலும், 6ஆம் வகுப்பிலும் பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அவர்களது கணக்கில் வங்கியில் சேமிப்பாக வைக்கப்படும் என பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அறிவித்துள்ளனர். 10 ம் வகுப்பு முடித்த உடன் இந்த டெபாசிட் பணம் முதிர்வுத் தொகையுடன் மாணவர்களின் மேற்படிப்பிற்கு உதவும்.
இந்த முயற்சிகளை முன்னாள் மாணவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.இந்த சலுகையால் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும்.
முன்னாள் மாணவர்களின் இந்த செயல் ஊர் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.












