தமிழக அரசின் விலையில்லா நோட்டு புத்தகம் வழங்கல்

தமிழக அரசின் விலையில்லா நோட்டு புத்தகம் வழங்கல்

தமிழ்நாடு அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்குகிறது. இந்தத் திட்டம், மாணவர்களின் கல்விக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திட்டம், 1 முதல் + 2 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இத் திட்டம் மாணவர்களின் கல்விக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்கிறது.

1 முதல் + 2 வகுப்பு வரை:

1 முதல் + 2 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.

கல்விக்கு ஊக்கம் அளித்தல்:

மாணவர்களின் கல்விக்குத் தேவையான வசதிகளை செய்து, அவர்கள் கல்வியில் தொடர்வதற்கு ஊக்கம் அளிக்கிறது.

திறன் மேம்பாடு:

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்கும், அவர்கள் நல்ல கல்வி பெறுவதற்கும் உதவுகிறது.

சமமான கல்வி:

சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்கிறது.

கல்வித்திறன் மேம்படுதல்:

விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம், அரசு மாணவர்களின் கல்விக்குத் தேவையான வசதிகளை செய்து, அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துகிறது.

அதன்படி இன்று தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தஸ் நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா நோட்டு புத்தகங்களை அறிவியல் ஆசிரியை விண்ணரசி ஆனந்தி உதவியுடன் பள்ளி தாளாளர் சகோதரி பெர்னாதத், பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி ஜெயந்தி ஆகியோர்கள் மாணவிகளுக்கு வழங்கினர்.

பாரதியார் வித்யாலயம்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி விலையில்லா நோட்டு, புத்தகங்களை மாணவர்களுக்கு
வழங்கினார்

.

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி

தூத்துக்குடி பத்திரகாளி அம்மன் கோவில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தங்கமணி விலையில்லா நோட்டு புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

பனையூர்

தூத்துக்குடி மாவட்டம் பனையூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் 2025 – 2026 ம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா நோட்டு புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியை அனிதா மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் திலக செல்வி, அற்புத சகாயராஜா, பரமேஸ்வரி, சத்திய ஜோதி கோடீஸ்வரி, மலர்விழி, சங்கரஸ்வரி, ஆகியோர் உடன் இருந்தனர்.

வீரவநல்லூர்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விலை இல்லா நோட்டுப் புத்தகங்களை தலைமை ஆசிரியை ப்ரீடா முன்னிலையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி வளர்மதி, 11 வது வார்டு கவுன்சிலர் அனந்தராமன், பெற்றோர் பிரதிநிதி வினோத் ஆகியோர் மாணவர்களுக்கு விலை இல்லா நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர்கள் சுமதி, கிரேஸ்லின் எபனேசர், பாலசுந்தரி, ஹெலன் பொன்மணி, எஸ்தர் ஹில்டாபாய் பிரியா மணி சாமுவேல் உடன் இருந்தனர்.