தூத்துக்குடியில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பாக “பொங்கல் கலை” திருவிழா : மேயர். ஜெகன் பெரியசாமி,மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ. ஆ. ப. பங்கேற்பு

தூத்துக்குடியில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பாக “பொங்கல் கலை” திருவிழா :

மேயர். ஜெகன் பெரியசாமி,மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ. ஆ. ப. பங்கேற்பு

கலை பண்பாட்டு துறை சார்பாக பொங்கல் கலை திருவிழா தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் ஜனவரி 14 மற்றும் 15 (புதன் & வியாழன் ) நடைபெற்றது.

 

பூங்காவில் அமைந்த மேடையில் பரதநாட்டியம், நையாண்டி மேளம், கரகம் ,மாடு மயில், பறை இசை மற்றும் பேண்ட் வாத்தியங்கள் கிராமிய நடனம் சிலம்பாட்டம் மற்றும் நையாண்டி மேளம் போன்ற பல் கலை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இரு தினங்களாக மாலை 5.00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற்றது.

முதல் நாள் ஜனவரி 14 புதன்கிழமை பொங்கல் கலை விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப.சிறப்பு விருந்தினராக வருகை தந்து கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

 

2 ம் நாளான ஜனவரி 15 பொங்கல் அன்று

கலை பண்பாட்டு துறை சார்பாக நடைபெற்ற “பொங்கல் கலை “விழாவிற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி கலந்து கொண்டு பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், சிலம்பாட்ட குழு மற்றும் நையாண்டி மேளம் ஆகிய கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தலைமை உரை வழங்கி விழாவினை சிறப்பித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியை சிவகாம செல்வி செய்திருந்தார்.