கல்வியும், மருத்தவமும் எனது இரண்டு கண்கள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்: பள்ளிகள் ஆய்வில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்

கல்வியும், மருத்தவமும் எனது இரண்டு கண்கள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்:
பள்ளிகள் ஆய்வில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்

பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 25 ம் தேதி முடிந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

36 நாட்கள் விடுமுறையை ஜாலியாக கழித்து நாளை ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி அரசு பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளான சி. வ. அரசு மேல்நிலைப்பள்ளி,சாமுவேல்புரம் மேல்நிலைப் பள்ளி,உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையா் மதுபாலன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மேயா் ஜெகன் கூறுகையில் “தமிழக முதல்வர் உத்தரவுப்படி பள்ளி தோ்வுக்குபின் கோடை விடுமுறை முடிந்து ஜீன் 2 ம் தேதி திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆய்வு:

அதன்படி எல்லா பள்ளிகளிலும் எதிர்கால தலைமுறையினரான மாணவ – மாணவிகள் நலன் கருதி பள்ளியில் உள்ள நீர்தேக்க தொட்டி,கழிவறைகள், விளையாட்டு மைதானம், கட்டிட மேற் கூரைகளின் தன்மை,வகுப்பறைகள், மாணவர்கள், ஆசிரியர்களின் இருக்கைகள், மின் சாதன பொருட்கள் மற்றும் ஆங்கில வழி கல்வி அறைகள் உள்ளிட்டவைகளை முழமையாக ஆய்வு செய்தார்கள்.

புதிய கட்டமைப்பு :

தற்போது மாநகராட்சி பள்ளிகளில் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் தற்போதைய காலத்திற்கு ஏற்ப செய்து கொடுத்துள்ளோம்.

அதனால் கடந்த ஆண்டு முதல் மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கு அதிகாித்துள்ளது. 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனா்.

திறனாய்வுத் தேர்வு :

அதே போல் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை கௌரவித்துள்ளோம்.

ஆசிரியர்களுக்கு பாராட்டு:

எதிர்கால தலைமைமுறையினாின் நலன் கருதி நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்து கல்வியின் தரத்தையும் உயர்த்தும் வகையில் தலைமை ஆசிாியா், ஆசிாியா்கள் நல்லமுறையில் பணியாற்றி வருகின்றனா்.

முதல்வருக்கு புகழாரம்:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கல்வியும் மருத்துவமும் எனக்கு இரண்டு கண்கள்” என்று அரசு விழாக்களில் தொிவிப்பாா். மேலும் கல்விக்கென்று கூடுதல் நிதி ஓதுக்கீடு செய்து எழுத்தறிவு படிப்பறிவு இல்லாதவர்கள் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்கு உழைப்பது பெருமையாக உள்ளது என்று முதல்வருக்கு புகழாரம் சூட்டினார்.

அதே போல் நாங்களும் மாநகராட்சி பகுதியில் உள்ள மாணவ – மாணவிகள் நலன் கருதி எல்லா பணிகளையும் துணையாக இருந்து செய்து கொடுக்கிறோம். எல்லா பள்ளிகளும் திறப்பதற்கு தயாராக உள்ளன.

விலையில்லா நோட்டு, பாட புத்தகங்கள்:

பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா நோட்டு, புத்தகங்கள் வழங்க இருக்கிறது. இதற்கான வேலைகள் முழுவீச்சில் நடபெற்று முடிவடைந்துள்து.

சீருடை, காலணிகள் :

அதே போல், தமிழக அரசின் இலவச சீருடை, காலணிகள் மாணவர்களுக்கு வழங்க அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்ப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

காலை உணவு:
காலை உணவில் சிறிது மாற்றம் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. அதன் படி பள்ளி திறந்த முதல் நாள் திங்கள்கிழமை பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்க இருக்கிறது.

மாநகராட்சி பள்ளியின் பயன் :

மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஓத்துழைப்பது போல் நல்லமுறையில் செயல்படும் மாநகராட்சி பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்து பலனடைய வேண்டும்.

ஆங்கில வழிக்கல்வி:

தனியார் பள்ளிகளுக்கு நிகராக தமிழ் ஆங்கில வழிக் கல்விகள் மாநகராட்சி பள்ளகளில் நல்லமுறையில் அனுபவமிக்க ஆசிாியா்கள் மூலம் வழங்கப்படுகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சாதனை:

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனின் பேரில் 2021ம் ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில் 100 மாணவர்கள் தான் படித்து வந்தனர் ஆனால் தற்போது ஒவ்வொரு மாநகராட்சி பள்ளியிலும் 900 முதல் 1200 பேர் படித்து வருகின்றனர் இது தமிழக முதலமைச்சருக்கு கிடைத்த மாபெரும் சாதனையாகும்.

சில பள்ளிகளில் புதிய வகுப்பறைகளும் கட்டப்பட இருக்கின்றன என்று கூறினாா்.

 

மாணவனுக்கு அறிவுரை :

சாமுவேல்புரம் பகுதியில் உள்ள ஓரு மாணவன் மேயரிடம் எனக்கு உங்களோடு ஓரு போட்டோ எடுத்துக்கொள்ள ஆசை என்று கூறினான்.

உடனடியாக அவனை மேயரும் ஆணையரும் அரவணைத்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனா் பின்னர் நல்ல பழக்க வழக்கத்துடன் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்கள்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி இளநிலை பொறியாளர் சரவணன், நகர அமைப்பு திட்ட உதவி பொறியாளர் முனீர் அகமது, சுகாதார ஆய்வாளா்கள் ராஜசேகா், ராஜபாண்டி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ். ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.