கோவில்பட்டி கே .ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க ஆண்டுப் பொதுக்கூட்டம் – 2025
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கல்லூரியின் கணினி அறிவியல் துறை, கணிதவியல் துறை, நுண்ணுயிரியல் துறை, வணிகவியல் துறை, உயிர்வேதியல் துறை, மின்னணுவியல் துறை மற்றும் ஆங்கிலத்துறை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் தலைமை உரை ஆற்றினார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கணேஷ்குமார் மற்றும் செயலாளர் மாரிமுத்து ஆகிய இருவரும் கலந்து கொண்டு சங்கத்தின் எதிர் கால நடவடிக்கைகளை எடுத்துரைத்தனர். முன்னாள் நுண்ணுயிரியல் துறை மாணவி மாலதி வரவேற்புரை நிகழ்த்தினார். நிதிநிலை மற்றும் ஆண்டு அறிக்கையை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். முன்னாள் கணினி அறிவியல் துறை மாணவி சரண்யா நன்றி கூறினார் .
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர்அருணாச்சலம் வழிகாட்டுதலின் படி முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர் .












