2025 – 2026 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை : 3 லட்சம் டார்கெட்

2025 – 2026 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை :

3 லட்சம் டார்கெட்

 

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இதில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

 

போட்டோ நன்றி 🙏நக்கீரன்

மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், எண்ணும்-எழுத்தும், காலை மற்றும் மதியம் உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

 

இதனிடையே, அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பெற்றோர்கள் பலர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

 

போட்டோ நன்றி 🙏ஏசியா நெட்

இதுவரை 1.79 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் 3 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் புதிதாக மாணவர்களின் சேர்க்கைப் பணிகளை தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதன்படி அங்கன்வாடி மையங்களில் படித்து முடித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.