10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 99.26 சதவீதம் தேர்ச்சி
2024- 25 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99.26 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பள்ளியில் 273 மாணவர்கள் தேர்வு எழுதினர் அதில் 271 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
பள்ளியில் முதலிடம்
பரத் குமார் – 487
இரண்டாம் இடம்
ராகுல்- 481
மூன்றாம் இடம் – பாலமுருகன் 480
மதிப்பெண்கள்பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிச் செயலர் ரமேஷ், தலைமை ஆசிரியர், ராஜதுரை சாமுவேல் மகமைத் தலைவர், பொருளாளர், துணைத் தலைவர், துணைச் செயலர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள்.













