பள்ளிகள் திறப்பதில் தாமதமா?

ஏப்ரல் மாதம் ஆண்டு இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் ஜூன் 2 ம் தேதி திறக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதினால் பள்ளிகள் திறப்பது தாமதமாகும் என்ற பேச்சு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிகரித்துள்ளது.
மேலும் ஜூன் 4-ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் முகாம்கள் பல பள்ளிகளில் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் பள்ளிகளின் திறப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், கோடை விடுமுறை முடிந்து பள்ளி ஜூன் 9ஆம் தேதி திங்கட்கிழமை திறக்கலாம் என்ற பேச்சும் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.












