சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு?
ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தத் தேர்வுகளை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தியா மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.இந்நிலையில் தேர்வு முடிவுகள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தேர்வு முடிவுகள் இன்றாவது வெளியாகுமா?
தேர்வு முடிவுகளைக் கீழ்க் காணும் இணையத்தில் காணலாம்

cbseresults.nic.in,
results.cbse.nic.in,
cbse.gov.in,
results.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாகக் காணலாம்.
அதேபோல, டிஜி லாக்கர் செயலியில் https://results.digilocker.gov.in/ என்ற முகவரியை க்ளிக் செய்தும் காணலாம்.
மேலும் குறுஞ்செய்தி வாயிலாகவும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காண்பது எப்படி
உங்கள் மொபைலில் Messages செயலியைத் திறக்கவும்.
கீழ்க்கண்ட ஃபார்மேட்டில் டைப் செய்யவும்.
cbse10/cbse12 <RollNumber> <SchoolCode> <CentreNumber>
இதை, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
உங்களின் தேர்வு முடிவும் மதிப்பெண்களும் SMS வழியாகத் திரையில் தோன்றும்.
கடந்த 2024ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.












