12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 96.19 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9வது இடம்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 96.19 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9வது இடம்.

தூத்துக்குடியில், 12ழம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள், 8,741 மாணவிகள் என 10.501 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 19,242 தேர்வு எழுதினர். இதில் 8,229மாணவர்கள் 10,280 மாணவிகள் என மொத்தம் 18,509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

94.14 சதவீதம் மாணவர்கள், 97.90 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 96.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9வது இடம் பிடித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கடந்த ஆண்டு 96. 39சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 57 அரசு பள்ளிகளில் 15 பள்ளிகள் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் மாணவர்கள் 90.02 சதவீதம், மாணவிகள் 96.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த தேர்ச்சி வீதம் 93.87 சதவீதம் ஆகும். இது மாநில அளவில் 7 வது இடமாகும்.

மேலும் மாவட்டத்தில் உள்ள 206 பள்ளிகளில் 80 சதவிதம் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.இதில் மாணவர்கள் 94.14 சதவீதமும், மாணவிகள் 97.90 சவீதமும் ஆகும். இந்த தேர்ச்சி வீதம் 96.19 சதவீதம் ஆகும். இது மாநில அளவில் 9 வது இடமாகும்.