மே 8 ம் தேதி + 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளி வருகிறது

                                                 மே 8 ம் தேதி + 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளி வருகிறது

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே எட்டாம் தேதி வெளிவர இருக்கிறது.கடந்த மார்ச் 2025-ல் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகளை மே 8 – 5- 2025 வியாழக்கிழமை காலை 9. 00 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் தங்களது பதிவின் மற்றும் பிறந்த தேதி ஆகிவிட்டது பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்

                                   https//results.digilocker. gov.in

மேலும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

கைப்பேசி எண்ணிற்கும் தனித்தேவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் எஸ் எம் எஸ் ( sms ) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 9 ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளிவரும் என்று ஏற்கனவே அறிவித்த சூழ்நிலையில் தற்போது ஒரு நாள் முன்னதாக தேர்வு முடிவுகள் வெளிவருகிறது.